வாரம் 6: வீட்டுப்பாடம்
➢ 2.5 படத்துடன் சொல்லை இணைக்க
➢ 2.11 குறில் - நெடில்
➢ 2.16 உரிய சொல்லைக் கொண்டு நிரப்புக: நிகழ்வுகாலம்
➢ வாக்கியம் அமை:
✓ வாக்கியங்களில் குறைந்தது 4 - 5 சொற்கள் தேவை ✓ வாக்கியம் 'யார், ஏன், எதை, எப்படி, எங்கே, எப்போது' ஆகிய கேள்விகளில் குறைந்தது மூன்று கேள்விகளுக்கு பதில் தரும் வகையில் அமைய வேண்டும்.
நடனம் - Dance
உடற்பயிற்சி - Exercise
நடக்கிறார் - Walking
➢ வாசித்தல் பயிற்சி (Reading Log):
✓ வாசித்தல்: பெற்றோர் கையொப்பம் அவசியம். (15-20 நிமிடங்கள்)
✓ பயிற்சி: 2.4, 2.2யை வாசிக்கவும்.
✓ மாணவர்கள் படித்த பகுதியிலிருந்து ஏதேனும் மூன்று வாக்கியங்களை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து எழுதவும்.
➢ உரையாடல் பயிற்சி: (2 - 4 நிமிடங்கள்)
ஆசிரியர் உரையாடல் தலைப்பை கொடுக்கலாம் அல்லது மாணவர் உரையாடல் தலைப்பைத் தேர்ந்தெடுக்கலாம். மாணவர்கள் தலைப்பிற்கேற்ப பெற்றோர், உறவினர் அல்லது நண்பர்களுடன் பேசித் தமிழில் உரையாடவும். அதை ஒலிப்பதிவு செய்து ஆசிரியருக்கு அனுப்பவும்.
மாணவர்கள் தனியாகவும் பேசலாம். உரையாடல் பதிவேட்டில் பெற்றோர் கையொப்பம் இட வேண்டும். ஒருமுறை பயன்படுத்திய தலைப்பை மீண்டும் பயன்படுத்துவதைத் தவிர்க்கவும். எழுத்துத் தமிழில் பேசுவதைத் தவிர்த்து உரையாடல் தமிழுக்கு ஏற்பப் பேசவும். ஓரிரு சொற்கள் ஆங்கிலத்தில் பேசுவது தவறில்லை.
குறிப்பு: உரையாடல் தலைப்பு உதாரணங்கள் பாடத்திட்டத்தின் இறுதியில் கொடுக்கப்பட்டுள்ளன. ஆசிரியர்கள் அதனைத் தேவைக்கேற்ப பயன்படுத்தலாம்.
➢ வேற்றுமை உருபு பயிற்சி:
✓ வேற்றுமை ஐ, ஆல், ஒடு, உடன், கு, இல், இலிருந்து, இன், உடைய, இடமிருந்து, அது, உடைய இணைத்து எழுதவும்.
உதாரணம்:
அரசன் + ஐ = அரசனை
அரசன் + ஆல் = அரசனால்
அரசன் + ஒடு = அரசனோடு
அரசன் + உடன் = அரசனுடன்
அரசன் + கு = அரசனுக்கு
அரசன் + இல் = அரசனில்
அரசன் + இலிருந்து = அரசனிலிருந்து
அரசன் + இன் = அரசனின்
அரசன் + இடமிருந்து = அரசன் இடமிருந்து
அரசன் + அது = அரசனது
அரசன் + உடைய = அரசனுடைய
எழுத வேண்டிய சொற்கள்: 1. பயிர் 2. மான்