வாரம் 14: வீட்டுப்பாடம்
4.9 பொருத்தமான சொல்லை கோட்டில் எழுதுக:
4.15 திருக்குறளை பொருளுடன் மனப்பாடம் செய்யவும்:
இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர்நாண நன்னயம் செய்து விடல்.
பொருள்: நமக்குத் தீமை செய்தவரைத் தண்டிப்பது அவர் வெட்கப்படும்படி அவருக்குத் நன்மை செய்தலே ஆகும்.
The (proper) punishment to those who have done evil (to you), is to put them to shame by showing them kindness, in return and to forget both the evil and the good done on both sides.
வாசித்தல் பயிற்சி:
✓ பெற்றோர் கையொப்பம் அவசியம். (15-20 நிமிடங்கள்)
✓ வாசித்தல்: கொடுக்கப்பட்டுள்ள ஏதேனும் ஒரு கதைப் புத்தகத்திலிருந்து ஒரு கதை.
✓ மாணவர்கள் படித்த பத்தியிலிருந்து ஏதேனும் மூன்று வாக்கியங்களை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து எழுதவும்.
உரையாடல் பயிற்சி: (2 - 4 நிமிடங்கள்)
ஆசிரியர் உரையாடல் தலைப்பை கொடுக்கலாம் அல்லது மாணவர் உரையாடல் தலைப்பைத் தேர்ந்தெடுக்கலாம். மாணவர்கள் தலைப்பிற்கேற்ப பெற்றோர், உறவினர் அல்லது நண்பர்களுடன் பேசித் தமிழில் கலந்துரையாடி, அதை ஒலிப்பதிவு செய்து ஆசிரியருக்கு அனுப்பவும். மாணவர்கள் தனியாகவும் பேசலாம். உரையாடல் பதிவேட்டில் பெற்றோர் கையொப்பம் இட வேண்டும். ஒருமுறை பயன்படுத்திய தலைப்பை மீண்டும் பயன்படுத்துவதைத் தவிர்க்கவும். எழுத்துத் தமிழில் பேசுவதைக் கூடியவரைத் தவிர்க்கவும். ஓரிரு சொற்கள் ஆங்கிலத்தில் பேசுவது தவறில்லை.
குறிப்பு: உரையாடல் தலைப்பு உதாரணங்கள் பாடத்திட்டத்தின் இறுதியில் கொடுக்கப்பட்டுள்ளன. ஆசிரியர்கள் அதனை தேவைக்கேற்ப பயன்படுத்தலாம்.
வேற்றுமை உருபு பயிற்சி:
✓ இவ்விரண்டு பெயர்ச்சொற்களுடன் வேற்றுமை உருபுகளை இணைத்து எழுதவும். எழுதவேண்டிய சொற்கள்: அவன், நாடு
வாக்கியம் அமை:
✓ வாக்கியங்களில் குறைந்தது 4- 5 சொற்கள் தேவை.
✓ வாக்கியம் ‘யார், ஏன், எதை, எப்படி, எங்கே, எப்போது’ ஆகிய கேள்விகளில் குறைந்தது மூன்று கேள்விகளுக்கு பதில் கூறும் வகையில் அமைய வேண்டும்.
புறா - Pigeon
நெருப்பு - Fire
நண்பர்கள் - Friends