வாரம் 10: வீட்டுப்பாடம்
3.8 ஆண்பால் - பெண்பால்
3.15 கீழே உள்ள குறளைப் பொருளுடன் மனப்பாடம் செய்யவும்
உடுக்கை இழந்தவன் கைபோல ஆங்கே
இடுக்கண் களைவதாம் நட்பு.
பொருள்: உடுக்கை - உடுத்திய உடை, இடுக்கண் - துன்பம், களைவது - நீக்குவது.
அணிந்திருக்கும் உடை உடலைவிட்டு நழுவும்போது எப்படி கைகள் உடனடியாகச் செயல்பட்டு அதனைச் சரிசெய்ய உதவுகின்றனவோ அதுபோல
நண்பனுக்கு வரும் துன்பத்தைப் போக்கத் துடித்துச் செல்வதே நட்புக்கு இலக்கணமாகும்.
(True) friendship hastens to the rescue of the afflicted (as readily) as the hand of one whose garment is loosened (before an assembly).
வாசித்தல் பயிற்சி:
பெற்றோர் கையொப்பம் அவசியம். (15-20 நிமிடங்கள்)
பயிற்சி: 3.6 மற்றும் படித்த கதை / கட்டுரை
ரவி தன் அம்மாவுடன் எங்குச் சென்றான்?
ரவி நூலகத்தில் எவ்வளவு புத்தகங்களைத் தன் கணக்கில் பெற்றான்?
உரையாடல் பயிற்சி: (2 - 4 நிமிடங்கள்)
ஆசிரியர் உரையாடல் தலைப்பை கொடுக்கலாம் அல்லது மாணவர் உரையாடல் தலைப்பைத் தேர்ந்தெடுக்கலாம். மாணவர்கள் தலைப்பிற்கேற்ப பெற்றோர், உறவினர் அல்லது நண்பர்களுடன் பேசிக் தமிழில் கலந்துரையாடி, அதை ஒலிப்பதிவு செய்து ஆசிரியருக்கு அனுப்பவும். மாணவர்கள் தனியாகவும் பேசலாம். உரையாடல் பதிவேட்டில் பெற்றோர் கையொப்பம் இட வேண்டும். ஒருமுறை பயன்படுத்திய தலைப்பை மீண்டும் பயன்படுத்துவதைத் தவிர்க்கவும். எழுத்துத் தமிழில் பேசுவதைக் கூடியவரை தவிர்க்கவும். ஓரிரு சொற்கள் ஆங்கிலத்தில் பேசுவது தவறில்லை. குறிப்பு: உரையாடல் தலைப்பு உதாரணங்கள் பாடத்திட்டத்தின் இறுதியில் கொடுக்கப்பட்டுள்ளன. ஆசிரியர்கள் அதனைத் தேவைக்கேற்ப பயன்படுத்தலாம்.
வேற்றுமை உருபு பயிற்சி:
இவ்விரண்டு பெயர்ச்சொற்களுடன் வேற்றுமை உருபுகளை இணைத்து எழுதுவும்.
மாணவன்
பாட்டி
வாக்கியம் அமை:
வாக்கியங்களில் குறைந்தது 4 - 5 சொற்கள் தேவை
வாக்கியம் 'யார், ஏன், எதை, எப்படி, எங்கே, எப்போது' ஆகிய கேள்விகளில் குறைந்தது மூன்று கேள்விகளுக்குப் பதில் தரும் வகையில் அமைய வேண்டும்
புகைப்படப் படம் - Photo
விடுமுறை - Holiday
நூலகம் - Library
உதாரணம்
விடுமுறை - நாளை முதல் எங்கள் பள்ளிக்கு ஏழு நாட்களுக்குப் பொங்கல் பண்டிகைக்கு விடுமுறை.
(உதாரணமாகக் கொடுக்கப்பட்டுள்ள வாக்கியத்தை மாணவர்கள் பயன்படுத்தக் கூடாது.)