வாரம் 16: வீட்டுப்பாடம்
பெற்றோர் கையொப்பம் அவசியம். (15-20 நிமிடங்கள்)
வாசித்தல்: வாரத்திற்கு விருப்பமான ஒரு கதையைப் படிக்கவும்.
மாணவர்கள் படித்த பத்தியிலிருந்து ஏதேனும் மூன்று வாக்கியங்களை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து எழுதவும்.
ஆசிரியர் உரையாடல் தலைப்பை கொடுக்கலாம் அல்லது மாணவர் உரையாடல் தலைப்பைத் தேர்ந்தெடுக்கலாம். மாணவர்கள் தலைப்பிற்கேற்ப பெற்றோர், உறவினர் அல்லது நண்பர்களுடன் பேசித் தமிழில் கவித்துவமாக அதை ஒலிப்பதிவு செய்து ஆசிரியருக்கு அனுப்பவும். மாணவர்கள் தனியாகவும் பேசலாம். உரையாடல் பதிவேட்டில் பெற்றோர் கையொப்பம் இட வேண்டும். ஒருமுறை பயன்படுத்திய தலைப்பை மீண்டும் பயன்படுத்தவதைத் தவிர்க்கவும். எழுத்துத் தமிழில் பேசுவதைத் தவிர்க்குமாறு தவிர்க்கவும். ஓரிரு சொற்கள் ஆங்கிலத்தில் பேசாதத் தடையில்லை.
குறிப்பு: உரையாடல் தலைப்பு உதாரணங்கள் பாடத்திட்டத்தின் இறுதியில் கொடுக்கப்பட்டுள்ளன. ஆசிரியர்கள் அதனைத் தேவைக்கேற்ப பயன்படுத்தலாம்.
இவ்விரண்டு பெயர்ச்சொற்களுடன் வேற்றுமை உருபுகளை இணைத்து எழுதவும்.
பாடம்
வீடு
வாக்கியங்களில் குறைந்தது 4- 5 சொற்கள் தேவை
வாக்கியம் ‘யார், ஏன், எதை, எப்படி, எங்கே, எப்போது’ ஆகிய கேள்விகளில் குறைந்தது மூன்று கேள்விகளுக்கு பதில் கூறும் வகையில் அமைய வேண்டும்
உதவி - Help
ஒலி - Sound
ஒலி - எங்கள் பள்ளி ஆண்டு விழாவில் ஒலி பெருக்கியை பயன்படுத்தி பாடல்களை இசைத்தனர்.